Wednesday 7 April 2021

திருவாரூர் மாவட்டத்தில் 76.57 சதவீதம் வாக்குகள் பதிவு





 திருவாரூர் மாவட்டத்தில் 76.57 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. 

76.57 சதவீதம் 
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்தநிலையில் நேற்று காலை 7 மணிக்கு  தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில் திருவாரூர் தொகுதியில் வாக்குப்பதிவு 73.2 சதவீதமும், மன்னார்குடி தொகுதியில்  வாக்குப்பதிவு 74.36 சதவீதமும், நன்னிலம் தொகுதியில் வாக்குப்பதிவு 82 சதவீதமும், திருத்துறைப்பூண்டி தொகுதியில் வாக்குப்பதிவு 76.74 சதவீதமும் நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதியில் வாக்குப்பதிவு 76.57 சதவீதம் ஆகும். 
சீல் வைப்பு 
வாக்குப்பதிவு முடிவடைந்த உடனே அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. பின்னர் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாகனங்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை மையமான திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன.அங்கு 4 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இந்த வாக்கு எண்ணும் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் (மே) 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment