Saturday, 6 October 2018

திருவாருர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இப்போது இல்லை தேர்தல் ஆணையம்


நமதூர் நிக்காஹ் தகவல் 07/10/2018

நமதூர் மேலத்தெரு K.M.அப்துல் பத்தாஹ்       அவர்களின் மகனார் அக்பர் அலி மணமகனுக்கும் ஆழியூர் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளார் பாத்திமா பர்வீன் மணமகளுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி1440ம் முஹர்ரம் பிறை 26 (07/10/2018) ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஆழியூர் மணமகள் இல்லத்தில் நடைப் பெற உள்ளது.

மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்த செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற   பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!

Wednesday, 3 October 2018

நமதூர் மௌத் அறிவிப்பு 03/10/2018

நமதூர் வடக்கு தெரு நாட்டாண்மை மர்ஹூம் ஷேக்தாவுது அவர்களின் பேரனும் அப்துல் ஹமீது அவர்களின் மகன்  முஹம்மது சமீர் அவர்கள் ஆசாத் நகரில் மௌத்.



அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் இரவு 8:30 மணிக்கு 

Monday, 1 October 2018

தமிழகத்தில் கடற்பகுதியில் வேதாந்தா ஹைட்ரோகார்பன் எடுக்கும் என்பதால் பிரச்சினை இல்லை -மத்திய அமைச்சர்

தேசிய செய்திகள்
தமிழகத்தில் கடற்பகுதியில் வேதாந்தா ஹைட்ரோகார்பன் எடுக்கும் என்பதால் பிரச்சினை இல்லை -மத்திய அமைச்சர்

தமிழகத்தில் கடற்பகுதியில் வேதாந்தா ஹைட்ரோகார்பன் எடுக்கும்  என்பதால் பிரச்சினை இல்லை -மத்திய அமைச்சர்
தமிழகத்தில் காவிரி படுகை கடற்பகுதியின் 2 இடங்களில்தான் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் என்பதால் பிரச்சினை வராது என மத்திய அமைச்சர் கூறி உள்ளார்.
புதுடெல்லி

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கபட்டு உள்ளது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. காவிரி டெல்டா படுகையில்  ஹைட்ரோ கார்பன் எடுக்க  வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.  சிதம்பரம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

பின்னர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் காவிரியை ஒட்டிய கடல் பகுதியில் இருந்துதான் ஹைட்ரோ கார்பனை எடுப்போம் . ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் . தமிழகத்தில் காவிரி படுகை கடற்பகுதியின் 2 இடங்களில்தான் வேதாந்தா நிறுவனம் ஹைட்ரோகார்பன் எடுக்கும் என்பதால் பிரச்சினை வராது. என கூறினார்.

Sunday, 30 September 2018

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா; நாட்டில் பெண்கள் பாதுகாப்பில் சென்னைக்கு முதலிடம்: முதல் அமைச்சர் பழனிசாமி

சென்னையில் நந்தனம் பகுதியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா நடந்து வருகிறது.  இதில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் பழனிசாமி உரையாற்றினார்.  அதில் அவர் பேசும்பொழுது, நாட்டில் பெண்கள் பாதுகாப்பில் மெட்ரோ நகரங்களில் ஒன்றான சென்னை முதலிடம் வகிக்கிறது என கூறினார்.
அவர் தொடர்ந்து, எம்.ஜி.ஆர். முதன்முறையாக முதல் அமைச்சராக பொறுப்பேற்ற பொழுது ரூ.330 கோடி விவசாய கடனை ரத்து செய்தவர்.
திரை துறையில் இருந்து வந்தவர்களில் முதல் அமைச்சராக மக்கள் ஏற்று கொண்டது எம்.ஜி.ஆரையே.  தமிழகத்தின் சத்துணவு திட்டத்தினை மத்திய அரசே பின்பற்றுவதற்கு எம்.ஜி.ஆர். காரணம்.
எம்.ஜி.ஆர். என்ற சக்தி தோன்றியிருக்கா விட்டால் தமிழகத்தின் கதி நிர்கதியாகி இருக்கும்.  எம்.ஜி.ஆர். கட்சி அவரது படம் போன்று 100 நாட்களே இருக்கும் என்றவர்கள் கோட்டைக்கே வர முடியவில்லை.
எம்.ஜி.ஆர். புகழை பறைசாற்றும் வகையில் அரசு சார்பில் நாணயம், அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
எம்.ஜி.ஆர். குடிசை வீடுகளுக்கு மின் வசதி செய்து கொடுத்தவர்.  தமிழக மக்களுக்காக கிருஷ்ணா குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தியவர்.  தனது சொத்துகளை பொது நலத்திற்கு விட்டு சென்றவர் என பேசினார்.

5 கோடிப்பேரின் ‘பேஸ் புக்’ தகவல்கள் திருட்டு - மீண்டும் சர்ச்சை

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இளைய தலைமுறையினர் தொடங்கி மூத்த குடிமக்கள் வரை அனைத்து தரப்பினராலும் விரும்பப்படுகிற சமூக வலைத்தளமாக ‘பேஸ்புக்’ விளங்குகிறது.

உலகமெங்கும் ஏறத்தாழ 200 கோடிப்பேர் இந்த ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தை தீவிரமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மட்டும் 27 கோடிப்பேர் ‘பேஸ்புக்’ பயன்படுத்துகின்றனர்.

ஆனால் அந்த சமூக வலைத்தளத்தின் உபயோகிப்பாளர்கள் 8 கோடியே 70 லட்சம் பேரின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் திருடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்து உலகமெங்கும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும், இங்கிலாந்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த தகவல் திருட்டு நடைபெற்றதாக அப்போது கூறப்பட்டது.

இது ‘பேஸ்புக் ’வலைத்தள நிறுவனத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதில், அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணை நடத்தியதும், அப்போது ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மன்னிப்பு கேட்டதும் நினைவுகூரத்தக்கது. இனி தவறுகள் நேராதபடிக்கு பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்படும் என அப்போது அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இப்போது மறுபடியும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்கள் 5 கோடிப்பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி, புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த திருட்டு கடந்த செவ்வாய்க்கிழமையன்று (25-ந்தேதி) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியர்களின் தகவல்களும் பெருமளவில் திருடப்பட்டிருக்கலாம், அவர்களின் ‘பேஸ்புக்’ கணக்குகளும் பாதிப்புக்குள்ளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

‘வியூ ஆஸ்’ என்னும் அம்சத்தின் மூலம் ஹேக்கர்கள் (சட்ட விரோதமாக இணையதளங்களில் புகுந்து திருடுகிறவர்கள், தாக்குதல் நடத்துகிறவர்கள்) ‘பேஸ்புக்’ உபயோகிப்பாளர்களின் கணக்குகளில் நுழைந்து தகவல்களை திருடி இருக்கலாம் என ‘பேஸ் புக்’ நிறுவனத்தின் துணைத்தலைவர் கய் ரோசன் தெரிவித்தார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

‘வியூ ஆஸ்’ என்பது உபயோகிப்பாளர்களின் கணக்கில் உள்ள தகவல்கள், பிற உபயோகிப்பாளர்களுக்கு எவ்வாறு காட்சி அளிக்கிறது என்பதை காட்டும் அம்சம் ஆகும்.

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, “செவ்வாய்க்கிழமையன்று பிற்பகல் எங்கள் என்ஜினீயர்கள் குழு, 50 மில்லியன் பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் கணக்குகளில் ஹேக்கர்கள் தாக்குதல் நடத்தி இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள். வியூ ஆஸ் என்னும் அம்சத்தின் மூலம் பேஸ்புக் உபயோகிப்பாளர்களின் கணக்குகளுக்குள் நுழைந்துள்ளனர். இதன் மூலம் அவர்கள் உபயோகிப்பாளர்களின் கணக்குகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்திருக்கலாம். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது” என கூறினார்.

இதில் என்ன வேடிக்கை என்றால் ‘பேஸ்புக்’ நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் மற்றும் அதன் தலைமை செயல்பாட்டு அதிகாரி ஷெரில் சேண்ட் பெர்க் ஆகியோரின் கணக்குகளும் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதுதான்.

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்களின் கணக்குகளுக்குள் ஹேக்கர்கள் புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர் என தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை நேற்று முன்தினம் 3 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்தது.

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள உபயோகிப்பாளர்களின் தகவல்கள் தொடர்ந்து திருடப்படுவது, அந்த சமூக வலைத்தளத்தின் பாதுகாப்பு அம்சங்கள் போதுமானவையாக இல்லை என்பதையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

நமதூர் மௌத் அறிவிப்பு 30/09/2018

நமதூர் சூஃபி நகர் வடக்கு தெரு. குத்துபு காலணியில்.  பச்சை கிளி  செய்யது அலி அவர்களின் தகப்பனார் அப்துல் ரெஜாக் அவர்கள் மௌத்.


அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் நேரம் இன்று மாலை 4 மணிக்கு 

Sunday, 23 September 2018

திருவாரூரில் போட்டி மு.க.அழகிரி தகவல்



திருவாரூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மு.க.அழகிரி பேசியதாவது,
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் திருவாரூரில் போட்டியிடுவது பற்றி பார்க்கலாம். என்னுடைய விசுவாசிகளிடம் கேட்ட பிறகு திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவேன். நான் தேர்தலில் போட்டியிட்டால் அனைத்துக் கட்சி தலைவர்களும் எனக்கு ஆதரவு அளிப்பார்கள்.
தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. ரஜினிக்கு பின்னணியில் நான் இல்லை. பாஜக என்னை இயக்கவில்லை. தமிழக அரசு எப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. திருவாரூர் தொகுதிக்கு தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ஆதரவு குறித்து பார்க்கலாம். எனக்கு எல்லோரும் ஆதரவு அளிப்பார்கள்.
கருணாநிதி கொள்கைகளை நான் என்றும் பின்பற்றுவேன். சென்னையில் நடைபெற்றது கருணாநிதி நினைவுப் பேரணி. கட்சியில் இணைத்துக்கொண்டால் இணைந்துகொள்வேன். திமுக-வுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன் என்றார். 

Saturday, 22 September 2018

நமதூர் நிக்காஹ் தகவல் 23/09/2018

நமதூர் சூஃபி நகர் நடுத்தெரு A.முஹம்மது யூனுஸ் அவர்களின் மகளார் ஹாஸ் ரிஸ்வானா மணமகளுக்கும் நாகப்பட்டினம் S.முஹம்மது ஆரிப் அவர்களின் மகனார் சாஹூல் ஹமீது மணமகனுக்கும் நிக்காஹ் இன்ஷா அல்லாஹ் ஹிஜ்ரி1440 முஹர்ரம் பிறை 12 (23/09/2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:45 மணிக்கு நமது முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசலில் நடைப்பெற்ற உள்ளது.

மணமக்களுக்காக நமது பிரார்த்தனை (துஆ)
بارك الله لك وبارك عليك ، وجمع بينكما في خير .
நபி (ஸல்அவர்கள் மணமக்களுக்காக திருமணத்தில் வாழ்த்தும்போது
... பாரகல்லாஹூலக வபாரக அலைக வஜமஅ பைனகுமா பீ கைர்...
பொருள்
அல்லாஹ் உங்கள் இருவருக்கும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவருக்காக மற்ற பொருள்களிலும் பரக்கத் செய்வானாகஉங்கள் இருவரையும் நல்லவற்றில் ஒன்றிணைப்பானாக!